தெரு கோடியில் நம் ஏழை தமிழன் உணவின்றி வாடுகிறான்.. கோடான கோடி செலவில் நாம் தமிழை வாழ வைக்க விழா எடுக்கிறோம்.. ஏற்றதாழ்வுகள் இல்லாத சமுகம் வேண்டும் என்பார், ஏற்றங்கலே இல்லாத சமூகமும் இங்கு உள்ளது.. ஒருவனுக்கு தேவைக்கு அதிகமாய் பணம் இருக்கும், இன்னொருவனுக்கு தேவைக்கே பணம் இருக்காது.. கிராமங்களின் எல்லையில் கருப்பண்ணசாமி சிலை இருக்கும், அது தப்பு செய்பவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும், ஆனால் நகரத்தில் தப்புகள் அதிகமாய் நடப்பதால்தான் அந்த கருப்பண்ணசாமியே இங்கு வர விரும்பவில்லையோ...
காக்கி சட்டை போடுபவனை காவல்காரன் என்போம், கதர் சட்டை போடுபவனை காந்தியவாதி என்போம், காவி உடை போடுபவனை சாமியார் என்போம், சிகப்பு நிற சட்டை போடுபவனை புரட்சியாளன் என்போம், கருப்பு உடை அணிபவனை நாத்திகன் என்போம்.. நாம் போடும் சட்டையை வைத்து இத்தனை வேற்றுமைகளை மனிதனால் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும்.. சகமனிதனை மதிக்க கற்றவன் தான் உண்மையில் மனிதன்.. இனி தமிழராய் மட்டும் அறியப்படாமல், இந்தியனாய் அறியப்படு.. எல்லையில் நமக்காக ஆயிரம் இதயம்கள் துடிக்கின்றன.. நாம் இங்கு தொலைகாட்சி பெட்டியை இனாமாய் வாங்கி வோட்டு போடுகிறோம்.. மனிதன் வாழ நிலம் வாங்குவான், ஆனால் இன்று நகரத்தில் மனிதனை புதைக்க கூட நிலம் வாங்க முடியாது.. பணத்தால் மனிதனும், மனிதநேயமும் அழிந்துவிட கூடாது ...
Thursday, July 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment