- உன்னை பார்த்த நாள் முதல், என்னை நான் மறக்கவில்லை, இந்த உலகத்தையும் மறக்கவில்லை, உன்னில் என்னை கலக்கவும் இல்லை, அன்று முதல் தான், என் தாய் மொழியில் எழுதினால் கூட,கவிதை என்று உணர்ந்தேன்.
- எல்லோரும் இதழ்களால் புன்னகைப்பர், நீ மட்டும் உன் கண்களால் புன்னகைக்கிறாய்…
- அவளை எனக்கு பிடித்ததால் அவளுடைய ஓட்டை வண்டியையும் எனக்கு பிடித்தது..
- நீ வரும் பாதையை பார்த்துகொண்டு நிற்கின்றேன், நீ கடந்து போனது தெரியாமல்…
- நீ என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும், என்னுள் ஆழமாய் இறங்குகிறாய் என்னை அறியாமலே..
- உன்னை பார்ப்பதை தவிர்த்தேன் ஏன் என்று தெரியாமல், பிறகு தான் உணர்ந்தேன் எனக்கு கண்ணாடியில் என்னை பார்ப்பது பிடிக்காது என்று, உன்னை பார்ப்பதை விட பார்க்காமல் இருக்கும் போதுதான் என் மனம் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்று என்னை நான் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேன்..
Tuesday, August 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment